திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி தலைமை வகித்தார், இன்ஸ்பெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை புதிய பேருந்துநிலையம் அருகில் முத்துப்பேட்டை போலீஸ் டிஎஸ்பி இனிக்கோ திவ்யன் கொடியசைத்து துவக்கிவைத்தார். பேரணியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ், டெல்டா ரோட்டரி தலைவர் சிவகுமார், செயலாளர் மாணிக்கவாசகம், பாரதமாதா தொண்டுநிறுவன இயக்குனர் எடையூர் மணிமாறன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சிவகுமார் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி பழைய பேருந்துநிலையம், காமராஜர் சிலை, அண்ணா சிலைவழியாக தேரடியில் நிறைவுபெற்றது . பேரணியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மெட் அணிய வேண்டும், மதுபோதையில் வாகனம் ஒட்டக்கூடாது, அதிக வேகம் ஆபத்தை தரும் என்பதை பள்ளி மாணவ, மாணவிகள் வலியுறுத்தி பதாகைகளுடன் சென்றனர் . செய்தியாளர். பாலா...