வந்தியத்தேவன் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன்
அனிமேஷனில் தயாராகியுள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கியுள்ளது சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் . ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற ,இந்தப்பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘
மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது.எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட வரிகள்போல அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்துள்ளது திரைப்படக்குழு
Comments