இந்து என்று உச்சரித்தாலே அலர்ஜி
சென்னையில் நடந்த விழாவில், எல்லா மதங்களுமே மரியாதைக்குரியவை தான் என்றும், இந்து என்று உச்சரித்தாலே சிலருக்கு ‘அலர்ஜி’ ஏற்பட்டு விடுகிறது என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
நமது கலாசாரம், பண்பாடு மற்றும் முன்னோர்களது கூற்றுகளை ஒருபோதும் மாற்றிவிட முடியாது. மக்களிடையே வேறுபாடுகளை, பிரச்சினைகளை சிலர் சுவர்கள் போல எழுப்பி இருக்கிறார்கள். அந்த சுவர்களை வீழ்த்தவேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு அது இப்போது அவசியமாக இருக்கிறது.
ஆனால் எல்லா மதங்களுமே மரியாதைக்குரியவை என்ற விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமது உடலில் ஓடிக்கொண்டிருப்பது இந்திய ரத்தம். எல்லா மதங்களையும் மதித்து நடப்பது இந்திய தன்மை. ஆனால் சிலருக்கு ‘இந்து’ என்று உச்சரித்தாலே போதும், ஒருவித ‘அலர்ஜி’ ஏற்பட்டு விடுகிறது. அவர்களை நாம் திருத்தமுடியாது. அவர்களுக்கும் எல்லோரையும் போல அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் அவர்களது எண்ணம் தவறாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments