இனி வீட்டில் தான் இசையமைப்பு


      விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். 

 

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு நடந்து வருகிறது.


 

தமிழரசன் படத்திற்காக இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை உருவாக்கி வருகிறார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி