திருத்துறைப்பூண்டியில் அரசு உதவிபெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
திருத்துறைப்பூண்டியில் அரசு உதவிபெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் தலைமை வகித்தார்
உணவு த்துறைஅமைச்சர் காமராஜ் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியங்களைசேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி, உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 2,363 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். இதில் நகர வங்கி தலைவர் சண்முகசுந்தர், நிலவள வங்கி தலைவர் சிங்காரவேலு, தாசில்தார் ராஜன்பாபு மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் வரவேற்றார், பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி.
படங்கள். மு. அமிர்தலிங்கம்
Comments