சந்திர கிரகணம் நாளை
2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் 10.01.2020 நாளை நிகழ்கிறது. இந்தியாவில் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் வெறும் கண்களால் இதை பார்க்க முடியும். powered by Rubicon Project நடப்பு ஆண்டில் மொத்தம் 4 சந்திர கிரகணங்கள் நிகழ இருக்கின்றன. இதில் முதல் சந்திரகிரகணம் நாளை நிகழ்கிறது.
இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மேக மூட்டம் இல்லாத நிலையில் தெளிவாக இது தெரியுமாம். இந்திய நேரப்படி நாளை இரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணிவரை இந்த சந்திர கிரகணம் நீடிக்க உள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சூரிய கிரகணம் உருவானதை இந்தியாவின் பல பகுதிகளில் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Comments