இசிகரெட்டுகளுக்கு அமெரிக்காவில் விற்பனைக்கு தடை.
இ-சிகரெட்டை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதில் இருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க டாக்டர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதே சமயம் பச்சை கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments