மலேசியா நாட்டுக்கு இனி விசா தேவை இல்லை
இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சுற்றுலா பயணிகளாக வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என மலேசிய அரசு அந்நாட்டின் அதிகாரபூர்வ அரசு நாளிதழில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சுற்றுலா பயணிகளாக ஆண்டுதோறும் பலர் செல்லுக்கொன்றனர். பொதுவாக எந்த நாட்டவராக இருந்தாலும், மற்றொரு நாட்டிற்கு வேலை செய்யவோ, சுற்றுலா பயணியாகவோ செல்லவேண்டும் என்றால் அவர்கள் நாட்டில் உள்ள இவர்கள் செல்ல இருக்கும் நாட்டின் தூதரகத்தில் விசா பெற்றபின்னரே அவர்களால் மற்றொரு நாட்டிற்குள் நுழைய முடியும்.
தற்போது மலேசிய அரசு ஆண்டொன்றிற்கு இந்தியாவில் இருந்து பல ஆயிரம் பேர் சுற்றுலா பயணிகளாக மலேசியாவிற்கு வருவதால், இனிமேல் இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என கூறியிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அரசு நாளிதழில் இந்த அரசாணையை வெளியிட்ட மலேசிய அரசு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் முதலில் இந்தியாவில் உள்ள மலேசிய விசா அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்த மூன்றாவது நாள் மலேசிய வரலாம். வரும் பயணி தங்களது ரிட்டர்ன் டிக்கெட்டையும் கொண்டுவர வேண்டும். விசா இல்லாமல் மலேசியாவில் 15 நாட்கள் வரை இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறது.
ஒரு முறை வந்து சென்ற நபர் மீண்டும் 45 நாட்கள் கழித்து தான் மலேசியாவிற்கு வர முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Comments