ஆந்திர சட்டமன்ற மேலவை கலைக்கப்படுகிறது.
ஆந்திர பிரதேச சட்டசபையில் மேலவை கலைப்புக்கான தீர்மானம் நிறைவேறியது.
ஆந்திர பிரதேசத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 58 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் அக்கட்சிக்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அமைச்சரவை ஒப்புதலுடன் ஆந்திர பிரதேச சட்டசபையில் சட்டமன்ற மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருந்தது. இதன்பின்பு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆந்திர சட்டமன்ற மேலவை கலைக்கப்படுகிறது.
இந்த தீர்மானம் பற்றிய தகவல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை அடுத்து காலவரையின்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
Comments