திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் நகர் பகுதியில் துணை மின்நிலையம் திறப்புவிழா

திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் நகர் பகுதி 
மக்களின் பயன்பாட்டுக்காக ரூ 13 கோடி மதிப்பீட்டில் புதியதாக துனை மின்நிலையம் திறப்புவிழா நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 
அருகே உள்ள நெடும்பலம் ரயில் கேட் அருகில் திருத்துறைப்பூண்டி நகர பகுதிக்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஒருகினைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ8.42 கோடி மதிப்பிட்டில் துனை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. 


திருத்துறைப்பூண்டி நகர பகுதியான பாண்டி , கட்டிமேடு ஆகிய பகுதிகள் உட்பட 25,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு 
பயன்படும் துனை மின் நிலையத்தை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் திறந்து வைத்தார். இதே போன்று முத்துப்பேட்டை பகுதியில் 4.92 கோடி செலவில் 40,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் துனை மின் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.


இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர்,சட்டமன்ற உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்த். உதவிபொறியாளர் பிரபு  உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி