தர்பார் count down
தர்பார்
Countdown.. ஸ்பெஷல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் நாளை திரைக்கு வருகிறது.
பல இடங்களில் நள்ளிரவு காட்சி மற்றும் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ரஜினிகாந்த் படம் ரிலீசாகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழாக் கோலம் களை கட்டும். நாளை சோலோ ரிலீசாக தர்பார் படம் வெளியாகவுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களும் தர்பார் கொண்டாட்டத்துக்கு ரெடியாகி வருகின்றன.
ரஜினி என்கிற ஒரு காரணத்திற்காகவே தர்பார் படத்தை தாராளமாக பார்க்கலாம். தர்பார் படத்தை பார்க்க மேலும், முக்கியமான 5 காரணங்களை இங்கே காண்போம்.
சந்திரமுகி, சிவாஜி, குசேலன் படங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் நடித்துள்ளார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தர்பார் படத்திலும் தலைவியின் தரிசனத்தை காண ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கின்றது.
தளபதி படத்திற்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது ஒளிப்பதிவால் சூப்பர்ஸ்டாரை வேற லெவலில் காட்டியுள்ளார் சந்தோஷ் சிவன். துப்பாக்கி படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்துள்ள சந்தோஷ் சிவன், தர்பார் படத்தில் வேற லெவல் கேமரா ஒர்க் செய்திருக்கிறார் என்பதை டீசர் மற்றும் புரொமோ வீடியோக்களே சாட்சியாக நிற்கின்றன.
ஏ.ஆர். முருகதாஸ், சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வேற லெவல் தர்பார் அமைத்து கொடுக்க உள்ளார் என்பது உறுதியாக தெரிகிறது. ரஜினிகாந்தை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு தர்பார் படத்தின் மூலமாக முருகதாஸுக்கு நிறைவேறியுள்ளதால், நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டானாக நடித்து அசத்தி வந்த சூப்பர்ஸ்டார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் கதாபாத்திரத்தில் மிரட்டவுள்ளார். மூன்று முகம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பான்டஸ்டிக் போலீஸ் officer ஆக ரஜினிக்கு தர்பார் அமையும் என தெரிகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்தின் எனர்ஜி வேற லெவலில் சும்மா கிழித்துள்ளார். மாஸ், ஸ்டைல், பஞ்ச் டயலாக், ஸ்டன்ட் என எல்லா விஷயத்திலும் இந்த முறை ரஜினி சிறப்பாக செய்துள்ளார் என்பது நிச்சயம். தர்பார் படம் இந்த பொங்கலுக்கு செம்ம கலெக்ஷனை அள்ளும் என கணிக்கப்படுகிறது.
--ருத்ரா
Comments