கலைஞர் கருணாநிதிக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை கிடையாது




கலைஞர் கருணாநிதிக்கே அவருடைய மகனான ஸ்டாலின் மீது நம்பிக்கை கிடையாது என திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் அமைச்சர் காமராஜ் விமர்சனம்.


திருவாரூர் மாவடம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டி பகுதியில்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்.கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது,


கருணாநிதி தனது மகனான மு.க.முத்து- வை எம்.ஜி.ஆர் மாதிரி கொண்டு வந்துவிடலாம் என படத்தில் நடிக்க வைதார். ஆனால் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டது. ஸ்டாலின் மீது நம்பிக்கையில்லாததால் தான் மு.க.முத்து வை தேர்வு செய்தார் ஆனால் அதிலும் தோல்வி அடைந்தார்.


கருணாநிதி இவ்வளவு பெரிய கட்சியை ஸ்டாலின் எப்படி கரை சேர்ப்பார் என்ற வருத்ததுடன் தானு மறைந்திருப்பார். தற்போது திமுக கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாகவும் அதிமுக வளர்ந்து கொண்டு இருக்கும் இயக்கமாக உள்ளது என தெரிவித்தார்.திருத்துறைப்பூண்டியில் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அதிமுக நகர செயலாளர் சண்முகசுந்தர் தலைமை வகித்தார், வக்கீல் பத்மநாபன், நகர அவைத்தலைவர் குணாளன் , எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் மரியதாஸ் முன்னிலை வகித்தனர். அமைச்சர் காமராஜ், முன்னாள் எம்பி கோபால் , பேச்சாளர் காரை செல்வம் ஆகியோர் பேசினர்.
இதில்  மாவட்ட துணைச்செயலாளர் பாலதண்டாயுதம் , முன்னாள் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, வக்கீல்கள் அன்பரசன், செல்லபாண்டியன், மற்றும் நகர நிர்வாகிகள், வார்டுகிளைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்


.பாலமுருகன்
திருத்துறைப்பூண்டி 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி