வங்கிகள் வேலை நிறுத்தம்
வங்கி ஊழியர்கள் அடுத்த இரு நாட்களுக்கு வேலை நிறுத்தம்*
🔹🔹12.25 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுத்துள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை மற்றும் மறுநாள் அறிவித்துள்ள வேலை நிறுத்ததின் எதிரொலியாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
🔹🔹20 சதவிகித ஊதிய உயர்வு, வாரத்திற்கு 5 வேலை நாட்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ளன. ஆனால் 12புள்ளி 25 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்க வங்கி நிர்வாகங்கள் தயாராக உள்ளதால் ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
🔹🔹கடந்த 8 ஆம் தேதி நடந்த பாரத் பந்திலும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.அடுத்த கட்டமாக மார்ச் மாதம் 11 ஆம் தேதி முதல் 3 நாட்களும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன
Comments