90ல் சாருஹாசன்
கமல் ஹாசன் அவர்களின் மூத்த சகோதரர் திரு. சாருஹாசன் பல படங்களில் நடித்துள்ள இவரின் 90வது பிறந்த தின விழா ஹாசன் குடும்பத்தினரின் குடும்ப விழாவாக மிகச்சிறப்பான முறையில் 6.1.2020 ஆள்வார்ப்பேட்டையில் உள்ள திரு.கமல் ஹாசன் அவர்களின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
திரு. கமல் ஹாசன் அவர்களின் குடும்பத்தாரும் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த பிறந்த நாள் விழாவில் இளையராஜா, சூப்பர் ஸ்டார் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகை சுகாசினி கலந்துகொண்டனர். இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் பணியிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கமல்ஹாசன் தனது அண்ணனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சொந்தங்களுடன் நேரத்தை கழித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

Comments