திமுக வெளிநடப்பு
வெளிநடப்புக்கு பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
*ஆளும் கட்சியால் தயாரிக்கப்பட்டு இருக்கக்கூடிய உரை என்பதால் ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம் - மு.க.ஸ்டாலின்*
. தமிழகத்தின் கடன் தொகை நான்கு லட்சம் கோடி ஆக உயர்ந்திருக்கிறது.
▪️தொழில் வளர்ச்சி இல்லை
புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று இப்பொழுது இருக்கக்கூடிய அமைச்சரவை தீர்மானம் போட்டு இதே கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதுவரையில் இவர்களிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.
▪️இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கக்கூடிய நேரத்தில் இப்பொழுது இருக்கக்கூடிய அதிமுக அதை ஆதரித்து இருக்கிறது. அதை அதிமுக ஆதரித்த காரணத்தால் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
▪️அது நிறைவேற்றப்பட்டு இருக்கக்கூடிய காரணத்தால் சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஒரு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு இருக்கிறது.
Comments