துங்கா நகரம் மும்பை
*இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை.*
*மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.*
*நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு நேரத்திலும் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் திறந்திருக்கும்.*
*சுற்றுலாவையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் இலக்குடன் இத்திட்டம் இன்று அமலுக்கு வருகிறது.*
*கடற்கரைகள் அமைந்துள்ள ஜூஹூ, சவுபாட்டி, வோர்லி உள்ளிட்ட இடங்களிலும் பாந்த்ரா குர்லா வணிக வளாகம், நாரிமன் பாயின்ட் உள்ளிட்ட இடங்களிலும் தலா 6 உணவு வாகனங்கள் நிறுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.*
*மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு, சேவையை வழங்கவும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.*
Comments