ரஜினி வாய் தவறி பேசியிருக்கலாம்
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது வாய் தவறி பேசியிருக்கலாம் -கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”திமுக – காங்கிரஸில் எந்த விரிசலும் இல்லை. அடிக்கடி இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவது இயல்புதான். கொள்கைரீதியாக திமுக – காங்கிரச் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அதை யாராலும் தகர்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.
மேலும் துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்து கேட்டபோது ”ரஜினி மீது மரியாதை உள்ளது. ஆனால் துக்ளக் விழாவில் இரண்டில் ஏதாவது ஒன்றை அவர் பேசியிருக்கலாம். இரண்டையுமே ஒப்பிட்டு பேசியதுதான் தவறு. அவர் அப்படி பேசும் நபரல்ல. வாய் தவறி அப்படி பேசியிருப்பார் என நினைக்கிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார்.

Comments