தமிழ் வளர்ச்சி விருதுகள் 2019 அறிவிப்பு

2019-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் .

 


,

 

தமிழக அரசு சார்பில் கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப் புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, மறைமலை அடிகளார் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2018, 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள், 3 பேருக்கு உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் ஆகியவற்றை பெறுவோரின் பெயர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன

 


தமிழ்த் தாய் விருதில் 5 லட்சம் ரூபாய், கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியவை வழங்கப்படுகின்றன. தமிழறிஞர்கள் பெயரிலான விருதுகளில் 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப் பதக்கம் உள்ளிட்டவையும், உலக தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளில் 1 லட்சம் ரூபாயும்  வழங்கப்படுகின்றன.

 

* தமிழ்த்தாய் விருது - சிகாகோ தமிழ்ச்சங்கம் 

 

* கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்

 

* உ.வே.சா. விருது - வெ.மகாதேவன் 

 

* கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்

 

* சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன் 

 

* மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி

 

* முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்

 

* அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து 

 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி