டிவிட்டரில் கிழி கிழி நெட்டிசன்கள்

ShameOnYouSanghiRajini என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாக்கி இணையவாசிகள் ரஜினியை திட்டி வருகின்றனர்


 


          நாடெங்கும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகின்றபோது  போராட்டக்காரர்களை ஒடுக்க போலிஸார் பல இடங்களில் வன்முறையைக் கையில் எடுத்து  வன்முறை வெடித்து


பல உயிர்களை பலி வாங்கி உள்ளது. 


                   இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


              இதனை எதிர்த்து திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பேசியிருந்தனர். அதேபோல இணையவாசிகளும் ரஜினியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 
 


                      காவிக்கு ஆதரவு அளித்துவிட்டு என் மீது காவி சாயம் பூச நினைக்கிறார்கள், நான் அதில் சிக்க மாட்டேன் என டயலாக் எல்லாம் பேசினீர்கள் என கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும், #ShameOnYouSanghiRajini என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி