நீயே நீயே அனுஷ்கா மாதவன்
இனிய மெலடி
.
நடிகை அனுஷ்கா ஷெட்டி, மாதவனுடன் மீண்டும் இணைந்துள்ள
திரைப்படம் நிசப்தம்
. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அனுஷ்காவும், மாதவனும் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இதில் அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்பராஜு மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியிடப்படுகிறது. இதன் ஆங்கில பதிப்பின் பெயர் சைலன்ஸ்.
நிசப்தம் / சைலன்ஸ் படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோனா பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்தப் படத்தை பீப்பிள் மீடியா தயாரிக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, “நீயே நீயே” என்ற சிங்கிளின் பாடல் மெல்லிசை ரகத்தில் அமைந்துள்ளது. கதாநாயகியின் அழகை வர்ணிக்கும் புதுவித சொற்களை பயன்படுத்தியிருக்கும், பாடலாசிரியர் கருணாவை நிச்சயம் பாராட்டலாம். அனுஷ்காவும், மாதவனும் இப்பாடலில் ரசிகர்களை வெகுவாகஅனைவரையும் கவர்ந்துள்ளனர்.
Comments