கோரைப்பாயில் படுத்துறங்கிய தோனி

,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இந்திய அணிக்கு கேப்டனாக


பல ஆண்டுகள் இருந்து இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று


இந்திய அணி பல சிறப்பான வெற்றிகளை குவிக் க செய்தவர். .


             மேலும் இன்று வரை ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றி கொடுத்த ஒரே இந்திய அணியின் கேப்டன் தோனி தான். தோனி தனது முன்னேற்றத்திற்காக பட்ட கஷ்டமும் அவ்வளவு பெரியது என்றே கூறலாம்.   2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிராக முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாட தொடங்கிய தோனி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.                    இதுவரை 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக தோனி விளையாடியுள்ளார்


                                         . தோனி தேசிய அணிக்கு தேர்வு பெறும் முன்னர் காரக்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டர் ஆக பணிபுரிந்தார் என்பது பலர் அறியாத செய்தியாகும். மிகப்பெரிய உயரத்தை இன்று தோனி அடைந்திருந்தாலும் ஆரம்பகாலத்தில் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை இந்த புகைப்படம் நமக்கு உணர்த்துகிறது. டிக்கெட் கலெக்டராக இருந்தபோது அவர் தங்கியிருந்த அறை எப்படி இருந்தது என்கிற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


                             .காரக்பூர் ரயில்வேக்கு சொந்தமான குவாட்ரஸில் தங்கியிருந்த தோனி கோரைப்பாய் சிமெண்ட் தரை மற்றும் ஒரு சிறிய கட்டில் கொண்ட அறையில் தனது நண்பர்களுடன் ஒன்றாக தங்கியிருந்துள்ளார். தற்போது பல கோடியில் சொகுசு வீட்டில் இருந்தாலும் அவரின் கடின உழைப்பே அவரை இந்த இடத்திற்கு சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி