சுவையான எகிப்து வெங்காயம் மலிவு விலையில்

எகிப்து வெங்காயம் சென்னை வந்தது..!


இந்தியாவிற்கு கப்பல் மூலமாக பலஆயிரம் டன்கள் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தின் விலையை குறைக்க தொடங்கி இருக்கின்றனர். 
ஒரு வெங்காயம் அரைகிலோ எடையில் இருப்பதால் ஓட்டல்களுக்கு அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.


மகாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிமிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலையின்றி வெங்காயத்தை சாலையில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது..! 
இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர். 
மேலும் நடப்பு ஆண்டில் விளைச்சல் குறைந்து போனது.


இதனால் ஓரளவு உயர்ந்த வெங்காய விலை,பதுக்கல்காரர்களின் குடோனில் இருப்பு வைக்கப்பட்டதால் பல மடங்கு விலை உயர்ந்தது. 
மக்களிடையே செயற்கையான வெங்காய தட்டுப்பாட்டை உருவாக்கி வெங்காய விலையை உயர்த்தி பகல் கொள்ளையில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் வெங்காய உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக மார்த்தட்டிக் கொண்ட நாம், 7 வது இடத்தில் உள்ள எகிப்து நாட்டில் இருந்து பல லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது.


எகிப்தில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு 40 ஆயிரம் டன் வெங்காயம் வந்திறங்கியது. இதனால் பதுக்கல் வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் குடோன்களில் இருந்து வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 
இதனால் ஒரே நாளில் வெங்காயத்தின் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை குறைந்தது. 
பார்ப்பதற்கு இரத்த சிகப்பு நிறத்தில் பெரிய அளவில் இருக்கும் எகிப்து வெங்காயம் ஒன்று அரை கிலோ எடையில் உள்ளது.


இந்த வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், ஓட்டல்கள் பெரும்பாலும் இந்த வகை வெங்காயங்களை வாங்கிச்செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். 
நம்ம ஊரில் நெல் பயிரிடுவது போல, அங்கு இந்த உருண்டை வெங்காயம் பயிரிடப்படுகின்றது.


வறண்ட நிலத்தை கொத்தி, பழுது பார்த்து, தண்ணீர் தெளித்து, சொட்டு நீர் பாசனம் முறையில் எகிப்தில் பயிரிடப்படுகிறது இந்த சிகப்பு வெங்காயம். 
விதையூன்றி, அது பயிரானதும், வெங்காய நாற்றை பிடுங்கி சம இடைவெளிவிட்டு நடுகின்றனர். தண்ணீர் சத்துள்ள வெங்காயம் குறைந்த அளவு தண்ணீரில் பெரிய உருவம் கொண்டதாக விளைகின்றது.


அந்த நாட்டின் மண் வளத்திற்கு ஏற்ப பூமிக்கு அடியில் உருண்டையாக விளைந்திருக்கும் வெங்காயத்தை குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்து, வெங்காயத்தின் அளவிற்கு ஏற்ப, தனி தனியாக பிரித்து மூட்டைகளில் கட்டி விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.


இத்தகைய வெங்காயங்கள் பெரிய அளவில் இருப்பதால் சுவையிலோ, தரத்திலோ நம்ம ஊர் வெங்காயம் போல இருக்காது என்று வழக்கம் போல சில வியாபாரிகள் கதை அளந்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த வெங்காயங்கள் சுவையும் , சத்தும் மிக்கது என்று சுட்டிக்காட்டுகின்றனர் ஊட்டச்சத்து நிபுனர்கள் பெரிய அளவில் இருப்பதால் தோலை உரிக்கும் வேலை மிச்சமாகும் என்று ஓட்டல்களுக்கு அதிக அளவில் எகிப்து வெங்காயம் வாங்கிச்செல்லப்படுவதால் பதுக்கல் வெங்காயத்தின் விலை அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது!


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி