நடிகர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள்


பாலிவுட்  கோழைகள்




குடியுரிமை சட்ட திருத்த மசாதோவை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர். கான்களோ இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர். இதையடுத்து #ShameonBollywood என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. பலரும் பாலிவுட் பிரபலங்களை விளாசி ட்வீட் செய்தார்கள். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா பேட்டி அளித்துள்ளார


ஹைதராபாத்தில் படபிடிப்பு காக முகாமிட்டுள்ள கங்கனா எகனாமிக் டைம்ஸுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர்  குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும்.  அனைவரும் கோழைகள். தினமும் 20 முறை கண்ணாடியில் தங்களை பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது கேட்டால் எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது, நாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்பார்கள் என்றார்


சிலரோ நாங்கள் கலைஞர்கள், நாட்டை பற்றி கவலைப்படக் கூடாது என்று பெருமை பேசுவார்கள். அவர்களை இதில் இழுக்க வேண்டும். அதனால் தான் நான் அவர்களை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களின் நடவடிக்கையை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவது மட்டும் அவர்களின் வேலை அல்ல. அவர்கள் மக்களால் உருவாக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கும் போது மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அவர்கள் இந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருப்பது இன்ஸ்டாகிராம் போஸ்ட் போடவும், போதை பார்ட்டிகள் நடத்தவுமா?



திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள். அவர்கள் கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் கோழைகளாக இருப்பதால் தான் சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துகிறார்கள், பெண்களை அவமதிக்கிறார்கள். அவர்களை தலைவர்கள் போன்று பார்ப்பதை நிறுத்த வேண்டும். நம் நிஜ முன் மாதிரி யார் என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும் என்கிறார் கங்க


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி