முத்தங்களின் கடவுள்  

பேசும் புத்தகம்


  முத்தங்களின் கடவுள்    (புத்தகவிமர்சனம்)



 இன்றைய  பேசும் புத்தகமாக


  முத்தங்களின் கடவுள்


 இதை  எழுதினவங்க


 ஜெயபாரதி என்கிற மனுஷி


இது ஒரு கவிதை தொகுப்பு


இந்த  தொகுப்பில் 75 கவிதைகள்  


 இதில் 90 சதவிகித கவிதைகள் காதலை பற்றிதான்


புத்தகத்தின் விலை ரூபாய் 100


பக்கங்கள் 96


 வெளியீடு ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்,சைதாப்பேட்டை,


சென்னை-,600015


 கவிதைகள் செய்தி சொல்லனும் என்ற தேவை இல்லை


 கவிஞனின் மன உணர்ச்சிப் பிரவாககங்களே கவிதை


அதனை வெளிப்படுத்தும் கவிஞர்


நம்மை ஈர்க்கிறார்.


கவிதை  நம்மை தொடணும்.  .அதுல  மனுஷி ஜெயிச்சிட்டாங்க.


அவருடன் நம்மை பயணிக்கவைத்து நாம் அந்தக் கவிதையை கவிதையாகவே பயணிக்காமல் நாம் அந்த கவிஞரின் உணர்வுகளுடன் ஒன்றிப்போய்விடுகிறோம்.


 இங்கே எல்லா கவிதைகளிலும்  ஒரு கேள்வி  இருக்கிறது.


 


மேற்கோண்டு புத்தகத்துடன் பேசுவதற்கு முன் பாரதி பற்றி


அதான் ஜெயபாரதி என்கிற மனுஷி பற்றி


இவர் 2008 லிருந்து கவிதைகள் எழுதி வருகிறார்..


 முதல் கவிதைத் தொகுப்பு குட்டி இளவரசி 2013ம் ஆண்டு வெளியானது..


 இந்த  முத்தங்களின் கடவுள் கவிதை தொகுப்பு 2014ம் ஆண்டு வெளியானது.


பல விருதுகளைப் பெற்றிருக்கும்  இவர் 2017 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி  யுவ புரஸ்கார் விருதினை இவரின்  ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்  என்னும் நூலுக்கு பெற்றுள்ளார்.


 இந்த முத்தங்களின் கடவுள் தொகுப்பில் கடைசியாக வருவதுதான் முத்தங்களின் கடவுள் கவிதை.


கவிதையின் கடைசி நான்கு வரிகள்


 ' புதிய முத்த  உலகத்தை உருவாக்க


முத்த ஜீவராசிகளைப் படைக்க


பூஜை அறையில் இருந்து தொடங்கலாம்


 வெற்றிக்கான முதல் முத்தத்தை' ,


எங்கேயோ கொண்டு செல்கிறார் அவர்


உண்மைதானே.


  காதலின் உணர்வுயே ஏறக்குறைய அனைத்து கவிதைகளும்.


 ஆனால் நுண்ணியமாக பார்த்தால்  இந்தக் கவிதைகளுக்கு  பின் ஒரு தனிமை உணர்ச்சி தெரிகிறது.


 தனிமை உணர்ச்சி  .ஆசை. அன்பு. காதல் .உறவுகள் இதைப் பற்றிய கேள்விகள் நம்மை ஊடுருவுகின்றன.


 


இரண்டு வரி மூன்று வரி நான்கு வரியில் அழகான  செய்திகள்.


நம்மை தாலாட்டுகின்றன.


கவிதை சொற்கள் ,சொல்லாடல்கள் செயற்கையாக புனையப்படவில்லை


 அந்த சொற்களின் நாட்டங்கள்,


 நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லுகிறது,


சில சமயங்களில் நம் துக்கத்தை ஆயாசப்பபடுத்த ஒரு மடி தேவைப்படுத்துகிறது


ம் காதலை  ரொம்ப ஈஸியா சொல்லிருக்காரு,


நான்கு வரியில்


தலைப்பு 'தீராக்காதல்''


'திருவிழாக் கூட்டத்தில்


தாயைத்தேடும் குழந்தைபோல'


காதலை


தேடிக் கொண்டிருக்கிறேன்


நான தேடும் காதல்


 நீயாகவும் இருக்கலாம்'


' வெறுக்கும் ஒரு சொல் கவிதையில்'


 'என்னை வெறுப்பதற்கு


 ஒரு காரணம் சொல்


 நான் உன்னை நேசிப்பதற்கான


உச்சபட்ச காரணமாக


 இருக்க வேண்டும்


 அது'


 இரவின் பாடலை 3 கவிதைகள் அலங்கரிக்க


'இரவு முழுக்க அழுகிறேன்


கண்ணீர்த்துளிகள்


அழைத்து வரட்டும்


என் மரணத்தை'


 என்ன ஒரு கற்பனை


 படிச்சு பாருங்க தெரியும்


'குரலின் மரணம்'


' பலவீனமானது என் அன்பு'



'புத்தனின் காதல்'


இப்படி கவிதை தலைப்புகள்


தலைப்புகளே கவிதையாக இருக்கிறது'


வார்த்தைகளும் இதயத்தை ஊடுருவும் மயிலிறகாக


 அந்த கவிஞரின்  மனவெழுச்சி'


அதையும் தாண்டி ஒரு உலகம்'


கண்டிப்பாக ஒரு காதல் என்பது பொய்க்கக் கூடாது என நினைக்கிறோம்'


நிஜத்தில் தோற்கிறோம்'


ஆனால் நாம் சோர்ந்து போவதில்லை'


 இப்படிப்பட்ட உலகத்தில் நாம் இருக்கிறோம்.


அப்படின்னு சொல்றாங்க.


அதில் கோபம் ஆத்திரம் அழுகை இப்படினு ஒரு மன பிரளயம் தெரிகிறது.


அதையும் மீறி நான் வாழ்வேன் என்ற நம்பிக்கையும்


தெரியவரும்.


நமது இளமைக்கால நினைவுகளை இப்புத்தகம் மீட்டு தருகிறது.


 இன்னும் இப்படி நான் நிறைய சொல்லிக்கிட்டே  போவேன்.


அந்த கவிதையை புத்தகத்தை வாங்கி படியுங்க.


உங்க இளமையை மீட்டு எடுத்து இளைப்பாருங்க.


காதல் தோல்வியோ வெற்றியோ அது முக்கியமல்ல


 


 


 


---உமா தமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி