அதிர்ந்த பா ஜா க
அதிர்ந்த டெல்லி
பெரும் கூட்டத்தை கூட்டி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதாக திமுக தலைமை பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது. குலுங்கியது சென்னை- அதிர்ந்தது டெல்லி என சமூகவலைதளங்களில் திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி தலைவர்கள் முழக்கம் எழுப்பினர்.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ''குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும். திமுக பிரபலம் அடைய விளம்பரத்திற்காக துணை நின்ற அதிமுகவுக்கு நன்றி. பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி''என கூறினார்
குலுங்கியது சென்னை- அதிர்ந்தது டெல்லி என சமூகவலைதளங்களில் திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
Comments