இன்று வேட்பு மனு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்.. இன்று வேட்பு மனு தாக்கல்
: தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16ம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு பரிசீலனைகள் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும்.
27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் உறுப்பினரகள் பதவி ஏற்பு ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ளது.
Comments