ரசிகர்கள் சப்போர்ட்..
வன்முறை வேண்டாம்னுதானே ரஜினி சொன்னார்.. ரசிகர்கள் சப்போர்ட்.. டிரெண்டாகும்
#IStandWithRajinikanth
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருந்தாலும் மறுபக்கம் ஆதரவும் அதிகமாக உள்ளது ரஜினிக்கு ஆதரவாக #IStandWithRajinikanth என்ற பெயரில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார். இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் ஒருபக்கம் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பலரும் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு அவற்றை#IStandWithRajinikanth என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
Comments