அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க எம்.ஜி.ஆர். கலைஞர் காரணம்
தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரே காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ 24,12,2019 அன்று மதுரையில் பேட்டியளித்திருந்தார்.
அப்போது ஜெயலலிதா பெயரை அவர் விட்டுவிட்டதால் அதனை அதிர்ச்சியுடன் பார்த்த அதிமுகவினர் பேட்டியை முடித்தபின்னர் அதுபற்றி அமைச்சரிடம் எடுத்துக்கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்களை அழைத்து மறுபடியும் ஒரு பேட்டி கொடுக்க அமைச்சர் முயன்ற நிலையில், செய்தியாளர்கள் அந்த இடத்தில் இருந்து கிளம்பி போய்விட்டனர்.
.
Comments