திருமாவளவன் கோலம் போட்டார்
தலைவர் திருமாவளவன் கோலம் போட்டு போராட்டம் நடத்தினார்.
சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கோலம் போட்டு போராட்டம் நடத்தினார்.
அவரின் 20 நிமிட முயற்சியில், 4 வண்ணத்துப்பூச்சிகளின் நடுவே No CAA என்ற எழுத்துகள் வரும் வகையில் அந்த கோலம் அமைந்ததை தொடர்ந்து கண்டன முழக்கமும் எழுப்பப்பட்டது. நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், கோலமிடுவது, அறவழி போராட்டம் என்றார். பெண்கள்தான் கோலம் போட வேண்டுமென்ற பழைய எண்ணத்தை உடைப்பதற்காகவே தான் கோலம் போட்டேன். மார்கழி மாதத்தில் மிச்சமிருக்கிற நாட்களில், No CAA, NO MODI என கோல வழி எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருவிழாவை விசிக புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments