ரஜினியுடன் மோதும் எம்.ஜி.ஆர். மகன்
ரஜினியுடன் மோதும் எம்.ஜி.ஆர். மகன்
நடிகர் சசசிகுமார் தற்போது பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். மகன் படத்தில் நடித்து வருகிறார்.
. பொன்ராம் அவர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர். இவர் இதற்கு பின் இந்த எம்.ஜி.ஆர் மகன் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகர் அந்தோனி தாசன். சசிகுமார் கடைசியாக கென்னடி கிளப் படத்தில் நடித்திருந்தார் . இதற்கடுத்து நாடோடிகள் 2,கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .
எம்.ஜி.ஆர்.மகன் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது ,அதன் மூலம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் வெளியாவது குறிப்பிடதக்கது.
பொங்கல் ரேசில் தற்போது தர்பார் மற்றும் எம்.ஜி.ஆர்.மகன் படம் கலம் இறங்கியுள்ளது ,இதனை அடுத்து என்ன என்ன படங்கள் மேலும் வரிசை கட்டி நிக்க போகிறது என்பதை பொருத்திருந்து பார்போம்.
Comments