பெசன்ட் நகர் கடற்கரைக்கு அனுமதி இல்லை

                    தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது.              ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் இப்படித்தான் மெரினா கடற்கரையில் திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடிய இளைஞர்கள் பல லட்சம் இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி கடைசியில் ஜல்லிக்கட்டுக்காக சட்டசபையை கூட்டி சட்டமே இயற்ற வைத்தனர். இதனிடையே போராட்டம் குறித்த தகவலால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்வதற்கு போலீசார் தடை விதித்தனர். விடுமுறைய கொண்டாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமையான இன்று பலரும் வந்த நிலையில் கடற்கரையை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி