புதுமைப்பெண்களின் நடை பயணம்
புதுமைப்பெண்களின் நடை பயணம்
வன்முறைக்கு எதிராகவும் போதைக்கு எதிராகவும்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்தியா முழுவதிலும் பெண்களின் உரிமைக்காக கம்பீரக்குரல் எழுப்பி வரும் சங்கமாகும். சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 4வரை பத்து நாட்கள் திருவண்ணாமலை தொடங்கி சென்னை வரையிலும் கடலுர முதல் சென்னை வரையிலுமாக 400 கிலோ மீட்டர் நடை பயணம் செய்து பொதுமக்களுடன் உரையாடல் நடத்த திட்ட மிட்டு நடத்தி வருகிறது
தமிழக அரசுக்கு
அவர்களது முக்கிய கோரிக்கைகள்
1.பெண்கள் ,பெண் குழந்தைகள் மீதான வன் முறையை தடுத்து நிறுத்த வேண்டும்
2.வன்முறை இல்லா தமிழகத்தை உருவாக்கவேண்டும்
3 .டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும்
அதன் படி முதல் பயணக்குழுவின் பயணம் சிதம்பரத்தில் தொடங்கியது
இன்று 3.12.20219 அன்று கூடுவாஞசேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் வந்தடைந்தது
இந்த பயணக்குழுவின் மகளிர் தங்களது கோரிகைக்யினை பொது மக்களிடம் தெரிவித்து உரையாடினார்கள்
நாளை 4.12.2019 அன்று சென்னை தலைமைச்செயலகம் வரை சென்று தங்களது மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு சென்று முறையிடுகிறார்கள்'
இன்று ஊரப்பாத்தில் நடைப் பெற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களை இங்கு காணலாம்
ஊரப்பாக்க மகளிர் ஓருங்கிணைப்பு குழுவின் சார்பாக இந்த நடைப்பயணக்குழுவூக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
செய்தி மற்றும் புகைப்படங்கள்:
திரு இளங்கோ , ஊரப்பாக்கம் (ஊரப்பாக்க மகளிர் ஓருங்கிணைப்பு குழு)
Comments