தித்திகும் சில்லுக்கருப்பட்டி
சில்லுக்கருப்பட்டி படம் இன்று வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை டிவைன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் சூர்யாவுக்கு இந்த படம் மிகவும் பிடித்துப் போனதால், தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இந்த படத்தை அவரே வெளியிட்டுள்ளார்.
2019ம் ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்திற்கு பல தரப்பு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அழகான வாழ்வியல் என்றும், காதல் எல்லா வயதிலும் இருக்கும் என்றும் பாராட்டி வருகின்றனர்..
ஏற்கனவே ஸ்பெஷல் ஷோ போடப்பட்டு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ' ஹலீதா ஷமீம்
சில்லுக்கருப்பட்டி படத்தில் நான்கு வித்தியாசமான காதல் கதை அழகாக கோர்க்கப்பட்டு ரசிகர்களின் மனங்களை வருடி வருகிறது. பேபி சாரா, குப்பை பொறுக்கும் சிறுவனின் குழந்தை காதல், காதலுக்காக இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் லீனா சாம்சனின் ஓல்டு ஏஜ் காதல், மணிகண்டன், நிவேதிதாவின் கார் ஷேரிங் காதல் மற்றும் கடைசியாக சமுத்திரகனி, சுனைனாவின் திருமண காதல் என நான்கு வெவ்வேறு ருசிகளை அடுக்கி சில்லுக்கருப்பட்டியாக இயக்குநர் இந்த படத்தை கொடுத்துள்ளார்.
படத்தின் மிக முக்கிய அம்சம் நான்கு கேமராமேன்கள் . இந்த படம் நான்கு காதல் கதைகளை கொண்டு உருவாக்கப்பட்டதால் . ஹலீதா ஷமீம் ஒவ்வொரு கதைக்கும் தனி தனியான ஒளி அமைப்பு இருக்க வேண்டும் என்று கருதி நான்கு கேமராமேன்களை கொண்டு இந்த படத்தை வித்தியாசமாக உருவாக்கியுள்ளார்
. பிரபல ஒளிப்பதிவாளர்களான அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமின் ஆகிய நால்வர் தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
Comments