ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 24 - ஆம் தேதி விடப்பட்டது. ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்த நிலையில், பள்ளி திறக்கும் தேதியில் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்தது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
Comments