பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன்
பெண்களைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசியதற்காக நடிகர் பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன்
. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கயநாதன் சம்மன் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு நடிகர் பாக்கியராஜ் ஆஜராகுமாறு அனுப்பியுள்ளார். முன்னதாக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் 'கருத்துக்கள் பதிவு செய்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 25ம் தேதி நடந்தபோது விழாவில் கலந்து கொண்ட பாக்யராஜ் 'ஊசி இடம் தராமல் நூல் நுழையாது' என சொல்வர், பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தப்பு நடப்பதற்கு வழி வகுக்கிறது. பெண்கள் உஷாராக இருந்தால் நல்லது. ஆண்களை மட்டுமே தப்பு சொல்வது தவறு, ஆண் தவறு செயதால் போகிற போக்கில் போய்விட்டு வந்து விடுவான். ஆனால் பெண் தவறு செய்தால் அது, மிகப்பெரிய தவறுக்கு வழி வகுத்துவிடுகிறது.
பெண்கள் சுய கட்டுப்பாடு வைத்துக்கொள்ள வேண்டும். இன்று மொபைல் போன் வளர்ச்சியால் பெண்கள் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றனர். அதனால் தவறும் சுலபமாக நடக்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு ஆண்கள் மட்டுமே காரணம் அல்ல. பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆண்கள் செய்தது தப்பு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கி கொடுப்பது பெண்கள்தான்'' என்று பேசியுள்ளார்
ஒட்டு மொத்த பெண்களின் கவுரவத்தை இழிவுசெய்யும் விதமாக பேசியுள்ள நடிகர் பாக்யராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனுவில் கூறிப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் டிசம்பர் 2ம் தேதி நடிகர் பாக்யராஜ் நேரில் ஆஜராக தமிழக மகளிர் ஆணையம் சம்மன் அளித்துள்ளது
Comments