இளையராஜா விழாவில் பிரதமர் மோடி
இளையராஜா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு?
மோடியின் நம்பிக்கைக்குரியவரும், பா.ஜ.க. நிர்வாகிகளிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவருமான ப்ரித்வி. தமிழ்நாட்டு அரசியலில் சினிமாவுக்கு இருக்கும் தாக்கத்தை உணர்ந்து, நட்சத்திரக் கலைவிழாவை சென்னையில் நடத்த அனுமதி பெற்றிருக்கிறார்
சினிமா ஸ்டார்கள் சங்கமிக்கும் விழாவாக நடத்தி அதில் மோடி கலந்துகொள்ள வைப்பதன் மூலமாக பா.ஜ.க.வின் மீதான பார்வையை தமிழகத்தில் அதிகம் பதியவைக்க முடியும் என்ற அடிப்படையில், "இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா' என்ற பெயரில் கலைவிழா நடத்தி, அதில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரைப்பட உலகமே கலந்துகொள்வதற்கான கான்செப்ட்டை தயாரித்து, மோடியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது ப்ரித்வி டீம்.
தேதி குறிக்கப்பட்டதும் விழாவுக்கான செயல்திட்டங்கள் விறுவிறுப்படையும்...'. மேலும் நட்சத்திர கலை விழாவில் மோடி பங்கு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளதாகவம் சொல்லப்படுகிறது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து பிரபலங்களும்ம் கலந்து கொள்ள ஏற்பாடு நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினருக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கலாம் எனவும்பேசப்படுகிறது.
Comments