வெங்காயம் விலை உயர்வு
தொடர் மழையால் .வெங்காயம் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.
Comments