சின்னஞ்சிறு வயதினிலே,

சின்னஞ்சிறு வயதினிலே,……………………(1)

 தொடர்
சியாமளா

 

 


'அம்மா இனி ஏன் சாப்பாடு மத்யானம் வராதுனு சொல்ற' நான் கேட்க,
'அதுவாடா உமா. அந்த சியாமளா உனக்கு சாப்பாடு கொண்டு வந்தாளே. அவ போனவாரம் . உடம்புக்கு முடியாம ஆஸ்பட்டல சேர்த்தாங்களாம்.
ஆனா அங்கேயே செத்துட்டாளாம் .உடம்புக்கு முடியாம' அப்படி சொல்லிக்கொண்டே அப்பாவை பார்க்க அவரு ஆச்சரியத்துடன் ,ஏதோ சொல்ல வந்து அம்மா முகத்தை பார்த்தவுடன் 'ஆமாடா அவ செத்துட்டா' என்றார்.
அப்போ எனக்க வயசு 10 இருக்கும் என நினைக்கிறேன் . சாவுனா என்னனனு தெரியல
'அப்படியா னு 'சொல்ல்லிக்கொண்டே விளையாட போய்விட்டேன்.
'யாருங்க அந்த சியாமளா' னு நீங்க கேட்பீங்கனு தெரியும்.
நான் 6வது படிக்க்கும் போது மத்யானம் சாப்பாடு கொண்டு வருவா.
எனக்கு மட்டுமில்ல எங்க ஏரியாவிலிருந்து அந்த பள்ளியில் படிக்கும் பல பசங்'களுக்கு மதிய சாப்பாடு கேரியரில் எடுத்து வருவாள் '
சரியாக மதிய இடைவேளையில் அவள் வந்து விட ,நாங்களாம் போய் எங்க கேரியரை து க்கிகொண்டு வந்து பிரித்து சாப்பிட்ட பின் கேரியரை கொடுப்போம்.
இப்போ ஒரளவுக்கு நினைவுக்கு வருது.
மாநிறம் ,ஒல்லியான உடல் வாகு , தலை முடி அடர்த்தி
எண்ணெய் இல்லால் இடுப்புவரை புரளும் முடியை சிகப்பு வண்ண ரிப்பன் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் .காதணி கிடையாது நெற்றியில் திலகம் இருக்காது
வளையர்கள் இல்லாத கைகள் , நேர்த்தியாக சேலையில் .
வெறும் கால்கள்,எப்படி இந்த வெய்யில் சூட்டை தாங்குதோ அந்த பாதங்கள் தெரியல.
சரியாக சொல்லனும்னா அவ முக ஜாடை நடிகை கே ஆர் விஜயாவை எனக்கு நினைவூட்டுகிறது இப்போது . வயது 20 இருக்கலாம்
தினமும சாப்பாடு கொண்டு வரும் போது அவளை பார்ப்பதுடன் சரி.
மற்றப்படி நான் பேசமாட்டேன் .இயல்பாகவே நான் கூச்ச சுபாவம் ,இப்பக்கூடதான் அவளும் பேசுவதில்லை. சாப்பாடு சாப்பிட்டு முடித்தவுடன் கேரியரில் மீதமிருக்கும் சாப்பாடுவுடன் தட்டையும் பையிலே போட்டு கொடுத்து விட்டு ஒடிவிடுவேன் .
எந்த சலனமில்லாமல் இல்லாத அந்த முகத்தில் ஒரு சோகம் தெரியும் .
கண்கலங்கினாபோலவே முகம் .அந்த வயதிலே எனக்கு அதற்கு மேல் சொல்ல தெரியல
மிகவும் கஷ்டப்பட்டு எல்லா கேரியர்களையும் ஒன்று சேர்த்து 'சாப்பாடு கூடையில் அடுக்கிய பின் தலைக்கு ஒரு டவலை வட்டமாக சுற்றி தலை மேல் வைத்து பின்னர் அந்த கூடைய தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு நடந்து செல்வாள்.
அந்த கூடை பாரம் தாங்கும அளவுக்கு அவளது உடல் இல்லை என தோன்றும்.
சில சமயங்களில் அங்குள் மற்ற சாப்பாடு எடுத்து வரும் பெண்கள் அவளுக்கு அந்த கூடையை தலைமேல் வைக்க உதவுவார்கள். அவள் மீதமுள்ள சாப்பாட்டை அங்கே சாப்பிடறதில்லை .பள்ளி பார்க் புல்வெளியில் நிழலில் பசங்களுக்கா காத்திருப்பாள்
நான் பேசனும் நினைப்பேன், என்ன பேசறதுனு தெரியாதே.
ஆனால் இதற்காக ஒரு சந்தர்ப்பம் அமைந்தது .
ஒரு தடவை எல்லோரும் போய்விட்டதால் தனியாக கேரியர் உள்ள கூடையை து க்க முடியாமல் போட்டுவிட எல்லா கேரியர்களும் தலை சும்மாடும் சிதறின.
பதறிப்போனாள் பயம் வந்து யாராவது உதவுவார்களா என பார்க்க
நான் அப்போ போய் உதவினேன் .
'என்ன கிளாசுக்கு போகலியா 'சியாமளா
'இல்ல' நான்
'வாத்தியார் வரல அதான் இங்கே வந்தேன்'
'நான் கூடையை துக்கி தரவா'
'சின்ன பையன் நீ'
'இல்ல நான் ,,பாதிவரை துக்கி தருவேன்'
'சரி'
அவள் தலைக்கு அந்த சும்மாடை வைத்த பின் நான் என்னால் முடிந்த அளவுக்கு ஒரு பக்கமாக இரணடு கைகளினனால் துக்கி அவளும் தனது இரண்டு கைகளால் தன் முழு பலத்தையும் பிரயோத்து துக்க ஒரு வழியாக சிரமில்லாம்ல் கூடை தலைக்கு மேலே உட்கார்ந்தது .சிரித்தாள், அந்த பார்வையில் நன்றி தெரிந்தது
'பேர் என்ன '
'சொன்னேன்
'நல்லா இருக்கே'
'என்ன கிளாசு'
'6ம் வகுபப எ'
'நான் வறேன்' உமா' என்றாள்
'சரி' யென தலையாட்னேன்
'என் பேரு தெரியுமா'
'ம்''
'சொல்லு'
சியாமளா. அம்மா சொல்லியிருக்காங்க'
'அப்படியா' ,சிரித்துக்கொண்டே நகர்ந்தாள்
இப்படி சில நாட்களாக நான் உதவ/ எங்க நட்பு உதயமானது
என்கிட்ட பேசம் போது மட்டும் அவ முகம் மலரும்.
என்னை 'உமா உமானு' அவ கூப்பிட என்ன எல்லாரும் கிண்டல் பண்வாங்க 'பொம்பள பேருடா உனக்கு 'என நான் ஒரு தடவை அவ கிட்ட சொன்னேன்
'உமா னா பார்வதி .கடவுன் தெரியமா நீ .கடவுள்டா' என சொல்லி சிரிப்பா
'உனக்கு கெட்டதே தெரியாது நல்லதே பண் வ 'என்பாள்
நான் அவளை' சியாமளா' என தான் கூப்பிடுவேன்
அவள் அது பற்றி ஒன்னும் சொல்வதில்லை
சில சமயங்களில் சியாமு என அழைப்பேன் ஒரு நாள் அவளுக்கு என்ன தோணிச்ச்சுதோ தெரியல 'நான் உனக்கு சாப்பாடு ஊட்டி விடாவா' என கேட்டாள்
'அய்ய நான் என்ன சின்ன குழந்தையா அப்டி சாப்பிட' என கேட்டேன்
'சரி'
சட்டென அவ முகம் வாடியது
'சரி நீயே சாப்டு' சொல்லி நகர்ந்தாள்
அவள் எனக்கு ஊட்டி விடனும் 'என கடவுள் நினைச்சார் போல
ஒரு தடவை வலது கையிலே அடிபட்டு வீக்கமாக ,
அம்மா எனக்கு ஸ்பூன் கொடுத்து அனுப்பினாங்க
என்னால் ஸ்பூனால் சாப்பிட முடியல பழக்கம் இல்லாததால முடியல
இதைப்பார்த்த சியாமா என் வீக்கத்தை பார்த்து பதறி என் தலைய தடவிக்கொடுத்து எனக்கு சாப்பிட ஊட்ட சாப்பாட்டை பிசைந்தாள்,
.பசங்கலாம்பபாக்கறாங்க எனக்கு வெட்கமாக இருக்கு' என்றேன்
'அவங்க பாத்த என்ன '
நான் கூச்சப்பட்டு நகர
அவள் விசனப்பட்டு
'என்ன உமா நான் ஊட்டினா சாப்பாடு மாட்டியா ''
'அதல்லாம் இல்ல'
'அப்ப நான் வேறு சாதினு வேணாம்னு நினைக்கறயா'
'சாதியா அப்படினா '
எனக்கு ஒன்னும் புரியல அப்போ சாதினா என்னகு தெரியாத காலம்
அவ மேலும் வருத்தப்படாம இருக்கனும் நினைத்து
'சரி ஊட்டு'
அவள் ஊட்ட நான் சாப்பிட்டேன்
அந்த ருசீக்கு என்ன சொல்றதுனு தெரியல இப்படி தொடர்ந்தது எங்க நட்பு
சில நாட்களில் அவ கதைகள் சொல்வாள் சினிமா கதைகள்
அப்புறம் சிவாஜி எம்ஜி ஆர் சினிமா கதைகள்
காலாண்டு வெகேஷனுக்கு பள்ளி லீவு விட்டாங்க

சியாமளாவை பாக்க முடியல
காலாண்டு வெகேஷனுக்கு பள்ளி துவக்கம்
சியாமமவை பார்த்தேன் . ஏதோ மாற்றம் தெரிந்தது
என்னனு தெரியல
'உமா எப்படி இருக்கே'
'நல்லா . நீ'
'ம்.'
'யாரு இந்த பையன்' .ஒரு முரட்டு ஆண் குரல் ஒலிக்க திரும்பினேன்
அந்த ஆள் வாட்ட சாட்டமாக இருந்தான். 30 வயது இருக்கலாம் அந்தகால சினிமா கதாநாயகன் போல தலை வாரியிருந்தான் கட்டம் போட்ட சர்ட் , கலர் பேன்ட் கச்சிதமாக இருந்தான்
ஆனாலும் அவனை எனக்கு பிடிக்காமல் போனது
கையிலே பீடி ,
'அது வா இது உமா ' என்று என்னை பற்ற சொல்ல நான் கேரியரை வாங்கினு ஒடிட்டேன்
அந்த பீடி நாத்தம் வயத்தை குமுட்டியது
என்னவோ அவன் மேல ஒரு வெறுப்பு வந்ததது
இப்பலாம் சியாமா என்னை உதவிக் கூப்பிடறதில்ல
அந்த ஆளே தினமும் உதவுவான் ,இரண்டு பேரும் தினமும் பேசிக்கொண்டே செல்வார்கள்
அவளும் அவன் யாரென்னு சொல்லல
நானும் கேட்கல .அவனுடன் பழகும்போது சியாமா சிரிக்கிறாள்,
கொஞ்ச நாள் கழித்து
' யார் அவரு 'என கேட்டேன்
'எனக்கு தூரத்து உறவு ' என சொன்னாள் ,
'அந்த ஆளு மூஞ்சி எனக்கு புடிக்கல' என சொன்னேன்
இப்படி சொன்ன உடனே அவ முகம் மாறியது
'ஏன் உமா அப்படி சொல்ற நீயுமா . அப்படி சொல்ற அப்படி சொல்ற அளவுக்கு உனக்கு அந்தாளு பிடிக்கலையா மனுஷன் முகத்தை பார்த்து அவன் நல்லவனா கெட்டவனா என சொல்ற அளவுக்கு நீ வளர்ந்துட்டே இல்ல அப்படின்னு' கேட்டா
எனக்கு ஒன்னும் சொல்ல தோணல
சியாமா என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு நகர்ந்தாள்
அவள் மனம் காயப்பட்டதை இப்போ உணர்ந்தேன்
அவளை கடைசியா பார்த்தது அன்னிக்குதான்
அவள அப்புறமா நான் பார்க்க ல
அவ இனிமே வர மாட்டா என மனசில் பட்டது
மனசு வருத்தமா இருந்தது '''
என்னவோ செத்துப் போயிட்டானு சொல்கிறார்களே ஒன்னும் புரியல
இதற்கு அப்புறம் ஒரு நாள் நண்பன் பரமானந்தம் வீட்டுக்கு போனேன் அவனுக்கும் சியாமளாதான் சாப்பாடு கொண்டு வருவா
அவங்க அம்மா அப்போ பக்கத்து வீட்டுக்காரம்மா கிட்ட பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன் 'அந்த சிறுக்கி சியாமளா யாரையோ கூட்டிக்கிட்டு ஓடி போய்ட்டாளாம் .
'தே ……டி யா மு ,,,,,டை 'அப்படின்னு ஏதோ கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தாங்க
'அவ அப்பன் குடிகாரன் அம்மா இல்ல அவ வீட்டுக்காரன் ஆக்சிடன்ட்ல செத்துப் போயி ரெண்டு வருஷம் ஆகுது துணை கேட்குது அதான் ஒடிப்போச்சி சிறுக்கி'
எனக்கு ஒன்னும் புரியல வந்துட்டேன் . என்னது சாவு ,ஜாதி ,மதம் ஓடிப் போயிட்டா இதெல்லாம் ஒன்னும் அப்ப புரியல அப்புறம் நான் மேல மேல படிக்கும்போது போது இதற்கெலாம் அர்த்தம் புரிந்ததது
இப்போ கொஞ்சம் கொஞ்சமா எல்லா விளங்குச்சு
இளம் வயதிலேயே சியாமா விதவைனு தெரிந்ததது
அப்பலாம் விதவை திருமணத்திற்கு ஆதரவு இல்லை
விதவையா இருக்கறவங்களை இந்த சமூகம் கல்யாணம் பண்ணிக்க அனுமதிப்பதில்லை .ரோடும் பேசக்கூடாது பாக்கக்கூடாதுனு அப்ப நிறைய கட்டுப்பாடுகள் அவங்களுடைய உணர்வுகளை யாரும் புரிந்து கொள்றதில்லை
அவங்களுக்கும் ஒரு துணை தேவைப்படறதை நாம் உணர்வதில்லை
சியாமா ஏன் காதுல கம்மல் போட்டுக்கல ஏன் பொட்டு வைத்துக்கொள்ளலனு தெரிஞ்சது .அவ ஓடிப்போன காரணமும் புரிந்தது இப்ப அந்த ஆள் மேலே எனக்கு கோவம் வரல அந்த மூஞ்சியை பாத்து கும்பிடனும் என தோணிச்சு சியாமா எங்கேயாவது நல்லா வாழ்ந்து கொண்டு இருப்பாள் என நம்புகிறேன்
அவளை தப்பா நினைச்சதை நினைத்து வருத்தப்ப்டடேன
ஏன் என் 'அம்மா அவ செத்துட்டானு' சொன்னதற்கு அர்த்தம் விளங்கியது
அவளை களங்கமா நினைக்காம நான் இருக்கனும் அம்மா நினைச்சிருக்கலாம்
' உமா என்ன யோசனை பண்ணிட்டு இருக்க' என நண்பன் கேட்க
'சியாமளா என்னை மன்னிச்சுடுனு' சொல்லி கண்ணீர் விட
' சியாமளாவா யாருடா அது நான் உன் பிரண்ட் பரமுடா' னு சொல்ல
நானும் அந்த நினைவுகளில் இருந்து விடுபட முயற்சித்தேன்



 

-------உமா தமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி