ரஜினி சொன்னது தப்பு ரோஜா
ரஜினி சொன்னது தப்பு.. முதல்வர் பழனிசாமி நல்ல ஆளுமை மிக்க தலைவர்.. ரோஜா !
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையுடன் செயல்படுகிறார், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று நடிகர் ரஜனிகாந்த் கூறியது தவறு என்று நடிகையும் ஆந்திர பிரதேச எம்எல்ஏவுமான ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்
. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆளுமையான தலைவர்கள் இல்லை. நல்ல தலைவர்களுக்கு இங்கு வெற்றிடம் நிலவி வருகிறது. முறையான வலிமையான தலைவர்களுக்கு வெற்றிடம் நிலவி வருகிறது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் எல்லோரும் இதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக எல்லை இந்த நிலையில் இது தொடர்பாக நடிகையும் ஆந்திர பிரதேச ஆளும் கட்சி எம்எல்ஏவுமான ரோஜாஅளித்த பேட்டியில், ஜெயலலிதா இறந்த பின் நானும் தமிழக அரசியலை கவனிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் என்னுடைய தொகுதியில் பல இடங்கள் தமிழகத்தின் எல்லையில் இருக்கிறது. இதனால் அங்கு தமிழக மக்கள் நிறுவனங்கள் அமைக்க வருவார்கள். அப்போது என்னுடன் பேசுவார்கள். அரசு எப்படி அப்போதெல்லாம் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசினார்கள். தமிழக முதல்வர் சாதாரண பின்னணியில் இருந்து வந்தார். ஆனால் இப்போது அவர் கட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார். இப்போது இருப்பவர் நன்றாக ஆட்சி செய்கிறார்.
நல்ல தலைவர் நல்ல தலைவராக உருவெடுத்துள்ளார். அதிமுக இல்லாமல் போகும் என்று நினைத்த போது அவர் கட்சியை முன்னுக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார். கட்சியை அவர் முன்னேற்றி உள்ளார். ஜெயலலிதா ஜெயலலிதா இருந்த போது அவர் முகத்தை கூட பார்த்தது இல்லை. ஆனால் இப்போது தனிப்பட்ட வகையில் அவர் முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். அவரிடம் ஆளுமை இருக்கிறது. ஆனால் ஏன் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று கூறினார் என்று தெரியவில்லை என்று ரோஜா குறிப்பிட்டுள்ளார்.
Comments