வசூல் ராஜா

மக்கள் நீதி மய்யமா? அல்லது , மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்கா?


 



நடிகராக இருந்த கமல்ஹாசனின் படங்கள் கலெக்‌ஷனை பார்ப்பதே கடினம்


ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்ட கமலின்.. கட்சி தற்போது  செம  கலெக்‌ஷனை அள்ளிக் குவிக்க துவங்கியிருக்கிறது! என்று தாறுமாறாக வசூல் ராஜா எள நம்மவரை கிண்டலடிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்....


 கட்சியை வெச்சு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட கமல் அது  மக்கள் நீதி மய்யமா? அல்லது , மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்கா என பேச ஆரம்பித்துவிட்டனர்...
எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வரும் மக்கள் நீதி...மைய்யம்

இதுவரையில் மாநில, மண்டல  மற்றும் மாவட்டத்தின் தலைமை பதவிகளில்தான் நபர்களை நியமித்திருந்தார் கமல். தற்போது உள்ளாட்சி  தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக இப்போது மாநிலம் முழுக்க வட்டங்கள், மாவட்டத்தின் பிற அணிகள் என .. எல்லாவற்றையும் ஏகபோகமாக நிரப்ப முடிவெடுத்து, ஆணைகளை வழங்கிவிட்டார். ...
மாவட்டம், வட்டம் அளவில் நிர்வாகிகளை நியமிக்க அவர் போட்டிருக்கும் திட்டம் அக்கட்சியின் நிர்வாகிகளை  திகைக்க வைக்கிறதாம்


...அது கிட்டத்தட்ட மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பிஸ்னஸ் போன்ற யுக்தியை அவர் பயன்படுத்தி அதன்படி, ஒவ்வொரு வட்டத்துக்கும் இருபது பேரை மய்யத்தில் சிறப்பு உறுப்பினர்களாக சேர்க்கனும்  ஒவ்வொரு நபரிடம் இருந்தும் தலைக்கு ஐநூறு ரூபாயை உறுப்பினர் கட்டணமாக் பெற வேண்டும். இப்படி சேரும்... பத்தாயிரம் ரூபாயைஅவர்  மய்யத்தில் கட்ட வேண்டும். இப்ப, இந்த நபர் சேர்த்துவிட்ட இருபது நபர்களும் ஆளுக்கு . இருபது பேரை சேர்க்க வேண்டுமாம். இப்படி செய்வதாலே, யார் அதிக நபர்களை சேர்க்கிறாரோ அவர்தான் நகரம், .. ஒன்றியம் மாதிரியான பதவிகளில் உட்கார வைக்கப்படுவாராம்!.என சொல்கிறார்கள்.. தலைமை வகுத்திருக்கும் இந்த  'வசூல் சட்டம்' மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளைக் கடுப்பாக்கி 'ஏற்கனவே லோக்சபாவுக்கு கட்சிக்கு மவுசு மடங்கிப்போச்சு! . ...
இதுல இவரு வேற வசூல் திட்டத்தை போட்டு கட்சியை அசிங்கப்படுத்துறாரே  என புலம்ப ஆரம்பித்துவிட்டனராம்



அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய கமல்,இது பற்றிலாம் அலட்டிக்கொள்ளாமல் தன் குடும்பத்தினர் எடுக்கும் ஆரத்தி தட்டின் ...
முன் பகுத்தறிவுடன் தலைகுனிந்து நிற்கிறார்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி