நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு
நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு
"நாங்க ஒரு சர்வே எடுத்தோம்.. நீங்கதான் அடுத்த முதல்வர்.. தைரியமா அரசிலுக்கு வாங்க..
தமிழக மக்கள் ஆதரவு உங்களுக்குதான்" என்று நடிகர் விஜய்யிடம் அரசியல் ஆலோசர் பிரசாந்த் கிஷோர் டீம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாந்த் கிஷோர்.. தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. திறமைசாலி.. ஐபேக் நிறுவன ஆலோசகர்.! ஒரே சமயத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் கெட்டிக்காரர். 2 முறை மோடி ஆட்சியில் அமர சாட்சாத் இவர்தான் காரணம்.. ஜெகன்மோகன் ரெட்டி முதல் நிதிஷ் குமார் வரை இவர்களின் வெற்றிக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டதும் இவர்தான்!
, பிகே டீம் நடிகர் விஜய்யை வலிய போய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அப்போது, "நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம்.. அந்த சர்வே முடிவில், 28 சதவித மக்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. அவர்தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்ற தமிழக மக்களே விரும்புகிறார்கள். அதனால் அடுத்த ஒரு வருஷத்துக்கான பிளான்களை நாங்கள் போட்டு தருகிறோம்.. அதை விஜய் ஃபாலோ பண்ணாலே போதும்.. அவர்தான் அடுத்த முதல்வர். தமிழக களநிலவரமும் விஜய்க்கு சாதகமாத்தான் இருக்கிறது.. அதனால் தைரியமா அவர் அரசியலுக்கு வரலாம்., விஜய்க்கு வயது இருக்கிறது. தமிழகத்தில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், அவர் வந்தால் சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன" என்று விளக்கமாக எடுத்து சொன்னதாம். இதையெல்லாம் விஜய் அமைதியாக கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் எந்த பதிலும், முடிவும் உடனடியாக சொல்லவில்லையாம். அரசியல் மீது விஜய்க்கு ஒரு ஈர்ப்பு இருப்பது வெளிப்பட்டு வருவதால், இதைதான் பிகே டீம் பயன்படுத்தி கொண்டுள்ளது. விஜய்க்கு ஆர்வம் இருப்பதைவிட, அவரது அப்பாவுக்கு மகனின் முதல்வர் கனவு நீண்ட வருடமாகவே இருக்கிறது.
Comments