தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம்

தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம்



   அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகத்திற்கு சென்றார் பின்னர், அங்கு செயல்படுத்தப்படும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை திட்டங்களுக்கு தேவையான முதலீடுகள் ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியபின்  சிகாகோவில் நடந்த 'இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை' கருத்தரங்கில் பங்கேற்றார்.

அப்போது தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து   -

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில்களில் முதலீடு செய்வதற்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன. கட்டுமான திட்டங்கள் அதிகம் இருப்பதால் அதில் கட்டுமான கம்பெனிகளும், அந்த தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் பங்கேற்கலாம். வரி திரும்ப பெறுதல், மூலதன மானியம், திறன்மிகுந்த மனிதவளம், தரமான மின்சார வினியோகம், 6 விமான நிலையங்கள், 4 துறைமுகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், திறமை மற்றும் போட்டிக்கு புகழ் பெற்ற மாநிலம் போன்றவை தமிழகத்தில் முதலீடுகளை செய்ய ஏற்ற ரம்மியமான சூழலாக உள்ளது
. தொழில்புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய எங்கள் மாநிலம் தயாராக இருக்கிறது. ஆகவே தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் நீங்கள் அனைவரும் இணையவேண்டும். தமிழகத்தில் நேரடியாகவோ, உட்கட்டமைப்பு உறைவிட நிதியிலோ முதலீடு செய்யுங்கள். இவ்வாறு அங்கு உரையாற்றினார்.

   தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் உறைவிட நிதிக்கு ரூ.710 கோடி மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் 'குளோபல் ஸ்டிரேஜடிக் அலையன்ஸ் இன்க்' தலைவர் டாக்டர் விஜய் ஜி.பிரபாகர் மற்றும் தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்போது  கையெழுத்தானது, தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி