இந்தியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி வரைந்த ஓவியம் கூகுள் முகப்பில் .
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி வரைந்த ஓவியம் கூகுள் முகப்பில் .
,
பிரதமர் நேருவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
முக்கிய தினங்களுக்கு இணையதள பக்கத்தின் முகப்பில் டூடுலாக வெளியிட்டுச் சிறப்பிக்கும் கூகுள் நிறுவனம், அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த திவ்யான்ஷி சிங்கால் என்னும் 7 வயது சிறுமியின் கைவண்ணத்தை கூகுள் நிறுவனம் பெருமைப்படுத்தியுள்ளது\
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஏழு வயது சிறுமியான திவ்யான்ஷி சிங்கல் வரைந்த படம்தான் இன்றைய டூடுலாக வைக்கப்பட்டுள்ளது.
.,தனது ஒவியம் பற்றி திவ்யான்ஷி சிங்கால் கூறியதாவது
'நான் வளரும் போது உலகின் மரங்கள் நடக்கவோ பறக்கவோ முடியும் என்று நம்புகிறேன். நிலத்துக்கு பாதிப்பில்லாமல் அதனை சுத்தப்படுத்த முடியும். மிகக் குறைந்த அளவே காடழிப்பு இருக்கும், மனிதர்கள் மரங்களிடம் அவற்றின் நண்பர்களிடமும் வேறு இடத்திற்கு போகும்படி சொல்லலாம். தனது வீட்டைச் சுற்றி பல மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டபோது இந்த யோசனை தனக்கு வந்ததாக திவ்யான்ஷி கூறியுள்ளார். தனது ஓவியத்திற்கு 'தி வாக்கிங் ட்ரீ' என்று அவர் பெயர் வைத்துள்ளார்.
Comments