சின்னஞ்சிறு வயதினிலே ( 2 )

சின்னஞ்சிறு வயதினிலே ( 2 )


 




'உமா இவ்வளவு புத்தகங்களா'? இது பரமு

'ஆமாம்' நான்
'எப்படிடா உன்னாலே சேர்க்க முடிந்தது'

'அதுவா பரமு ஒரு ஆசைதான்'

'புத்தக பைத்தியம்' புழு'
அவன் சொல்லிட்டடு போய்டடான்

சின்ன வயசிலே எனக்கு புத்தகம் படிக்கற ஆசை ,
அதிகம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறேன் , புத்தக வாசிப்பில் முன்னோடி என்னுடைய தந்தையார் தான் எனக்கு குருவென.

சின்ன வயசுல , அதாவது நான் 6ம் வகுபபு படிக்கற போது எங்க வீட்டில கல்கி புத்தகம் வார வாரம் வாங்குவாங்க, என் அப்பா அந்த புத்தகத்தில் வரும் தொடர் கதைகளை பத்திரமாக பிரித்தெடுத்து சேர்த்து பின்பு அந்த தொடர் கதைகள் முடிந்தவுடன் அவற்றை தைத்து அட்டை போட்டு பெயர் எழுதி பத்திரமாக அலமாரியில் வைத்து விடுவார் .
நான் அடுத்த வகுப்புகளில் செல்ல இந்த புத்தகங்களை பார்த்து படிக்க ஆரம்பித்தேன் . தொடர் கதைகளை விரும்பி படிப்பேன் . அப்படித் தான் என்னுடைய ஆர்வம் வளர்ந்தது .

மிகவும் இன்டரஸ்ட வந்த பிறகு கல்கி இதழ் மற்றும் பல வார இதர்களை படிக்க ஆரம்பிச்சேன்.
இதுக்கு பிறகு நானும் அதேபோல புத்தகங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.
புத்தகங்கள் அதிகமாக அலமாரி நிறைந்தது.

இன்னொரு காரணம் என்னுடைய தாத்தா .அவர் பி அண்ட் சி மில்லில் ஒரு பிரிவுக்கு மேனேஜராக இருந்தார் . .எங்க வீட்ல இருந்து அவர் வீட்டுக்கு வந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுதான் இருக்கும்.
வாரா வாரம் ஞாயிற்றுககிழமை அவர் வீட்டுக்கு போயிடுவேன் . காரணம் , அவர் அப்போது தமிழில் வந்த அனைத்து வார இதழ்கள் மற்றும் மாத இதழ்களை வாங்குவார் . கல்கி. ஆனந்தவிகடன். குமுதம் கல்கண்டு . கலைமகள் .மஞ்சரி. தினமணி கதிர் ,அமுதசுரபி மற்றும் மஞ்சரி இப்படி.
அவரும் என் அப்பாவைப் போல தொடர்கதைகளை சேகரித்து தைத்து அலமாரியில் பத்திரமாக பாராமரித்து வந்தார் .


தாத்தா எனக்கு நண்பர் ஆனார் . அவர் வீட்ல படிக்க ஆரம்பிச்சு புத்தக வாசிப்பு அதிகமாக வளர்ந்தது
நான் படித்த புத்தகங்களில் பல நாவல்களில் மிக பிரசித்தம் பெற்றவை.
ஆயிரக்கணக்கில் படித்ததில் இங்கே பட்டியல் இட்டால் இந்த பகுதியே ஒரு தொடராக எழுத வேண்டியிருக்கும்

கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்

நா .பாவின் ,பொன்விலங்கு, மணி பல்லவம்
சாண்டில்யனின் ,கடல் புறா, யவனராணி
சுஜாதாவின் , நைலான் கயிறு, 14 நாட்கள், கருப்பு சிகப்பு வெளுப்பு
மணியனின், இதயம் பேசுகிறது பயணக்கட்டுரைகள்
உன்னை ஒன்று கேட்பேன் , சொல்லத்ன் நினைக்கிறேன் நாவல்கள்
சாவியின் ,வாஷிங்கடனில் திருமணம்
மெரினாவின் , தனிக்குடித்தனம்
ஜாவர் சீதாரமனனின் ,மின்னல் ,மழை ,மோகினி
கல்கண்டில் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள்
குறிப்பாக ஆந்தை விழிகள் ,இன்னொரு செருப்பு எங்கே,
அரு, ரமாநாதனின் குண்டுமல்லிகை
ஜெகசிற்பியனின், பத்தினிக்கோட்டம்
அகிலனின் ,கயல்விழி

உமாசந்திரனனின், முள்ளும் மலரும்

ர.சு.நல்ல பெருமாளின், கல்லுக்குள் ஈரம்

புஷ்பா தங்கதுரையின்,என் பெயர் கமலா ,நீ நான் நிலா

ஜெயகாந்தனனின் ,சில நேரங்களில் சில மனிதர்கள்

ராஜாஜீயின் , இராமயணம், மகாபாராதம்

பாஸ்கரதொண்டைமானனின் ,வேங்கடத்துக்கு அப்பால்

ரா கணபதியின் , அறிவுக்கனலே அருட்புனலே

திருமுருக கிருபானந்தவாரியரின் , சிவனருட் செல்வர்

சிறவர்,கதைகளில் வாண்டுமாமா கதைகள், பூவண்ணன் கதைகள்

கல்கியில் வெளிவந்த சித்திரகதைகளான மரகதச்சிலை, ,பவழத்தீவு
குமுதத்தில் வேதாளம் ,ரிப்கெர்பி சித்திரகதைகள்,

8வது படிக்கும்போது பள்ளிக்கூட நண்பன் விஜயகுமார் ஒரு இன்ஸ்பிரஷேன்'
வாராவாரம் அவங்கவீட்டுக்கு போயிடுவேன்
அவன் வீட்ல பான்தம்ஸ் ஆங்கில காமிக்ஸ் மற்றும் அம்புலிமாமா படிப்பேன். அம்புலிமாமாவில் விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள், நாட்டுக்கு நல்லது செய்யும் பழனி தொடர் ,ராமாயணம், மகாபாரதம் கதைகள் இப்படி

வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மாவட்ட லைப்ரரி இருந்தது அங்கே சென்றும் புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சேன் .என்னுடைய புத்தக ஈர்ப்பை கவனித்த லைப்ரரியன் தம்பி நீ டெய்லி வந்துடு ,இங்கேய உட்கார்ந்து படினு பல புத்தகங்களை தருவாரு. அப்படி படிக்க ஆரம்பித்து அந்த வருடத்திலே 365 புத்தகங்கள் படித்தேன் .

,அதே போல அந்த எங்க வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த இன்னொரு லைப்ரரி வெங்கடேசபுரம் காலனி .இங்கேயும் என் புத்தக வேட்டை தொடர்ந்தது
இங்கேதான் அறிமுகமானார்கள்.
தி.ஜானகிராமன், .கி. ராஜநாரயணன், கு,அழகிரிசாமி
கு,பாரா, புதுமைப்பித்தன் ,தேவன். சி.சு செல்லப்பா.
லா சா ரா .தா நா குமாரசாமி
கொத்தமங்கலம் சுப்பு ,சா.கந்தசாமி, நரசய்யா
அனைத்து மொழி பெயர்ப்பு நாவல்கள்.
லியோ டால்ஸ்டாய், கார்ர் மாக்ஸ், ஓ ஹென்றி
சார்ஸ் டிக்கன்ஸ் , செகப்பிரியர் நாடகங்கள்
தாகூரின் நாவல்கள்.
பெண் எழுத்தாளர்களில் லட்சுமி , ராஜம் கிருஷ்ணன் ,அநுத்தமா, ஆர் .சூடாமணி, அம்பை ,எஸ், ரங்கநாயகி

கவிதைகளில் கண்ணதாசன் ,பட்டுக்கோட்டையார்
கல்கியில் கண்ணதாசனின், கடைசி பக்கங்கள்
காஞ்சி காமகோடியாரின் பொன்மொழிகள்

துப்பறியும் கதைகளில் ,சிரஞ்சிவீ , பி .டி .சாமி

இதல்லாம் சின்னஞ்சிறு வயதினிலே

பிறகு தான் தெரியுமே
சிவசங்கரி ,இந்துமதி, வாசந்தி போன்ற பெண் எழுத்தாளர்களும்
ராஜேந்திர குமார் .பட்டுக்கோட்டை பிரபாகரர்களின் அசுர பிரவேசம்

மாறுபட்ட படைப்புகளுக்கு இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன் இவங்களும் பாதிக்க
கவிஞர்களில் மு.மேத்தா, வைரமுத்து இப்படி நீள்கிறது

முத்து காமிக்ஸ் இதன் பாதிப்பும் அதிகம் ஆயிரக்கணக்ன காமிக்ஸ் வாங்கினேன்
இரும்புக்கை மாயாவி, லாரண்ஸ் டேவிட், ஜானி நீரோ, மந்திராவதி மாண்டரேக், மாடஸ்டி பிளாசி
அது ஒரு பக்கம்
'என்ன உன் கட்டுரை இன்னும் முடியலியா' என பரமு கேட்க
'அது முடியாதுடா '

ஆம்
என் வாழ்க்கையில் அந்த சின்னஞ்சிறு பிரயாத்திலே புத்தகங்களே நண்பனாகி விட்டது.
தினமும் பேச அதன் வாசனைகளை நுகர

வாழ்வின் அர்த்தம் விளங்கியது .
புத்தகங்களே ஒரு கால கட்டத்தில் மிக இன்ஸ்பிரசேனாக மாறிவிட்டது .

நான் சேகரித்த புத்தகங்களை இப்போது தொடக்கூட யாருமில்லை .இந்த ஜெனரேஷன் சுத்தமாக புத்தகங்களை படிப்பதை விட்டு விட்டார்கள்

புத்தகங்களை கடன் வாங்கிகூட படிச்சிருக்கேன் .
கல்லூரி நாட்களில் மிகஅதிகமாக படிக்க ஆரம்பிச்சேன்

நடுவிலே கொஞ்ம் பக்கத்தை காணோம் போல அரசு பணியில் சேர சுத்தமாக படிப்பதை விட்டாச்சு .

இப்போ பேஸ்புக் வந்ததிலிருந்து புத்தக கண்காட்சி
எங்கெங்கெல்லாம் நடக்குது போன்ற விவரங்கள் மற்றும் புத்தகங்கள் விலை ,கிடைக்கும் இடம் போன்றவை தெரிகிறதால் கூரியர் மூலம் ஆர்டர் பண்ணி வாங்குகிறேன்
புத்தகங்களை வாங்குங்க படியுங்க
அடுத்த தலைமுறைக்கும் சொல்லுங்க
பின்னர் அவங்க ஐயோ நம்ம எல்லாம் படிக்க முடியாமப் போச்சு என நிலை வரக்கூடாது .காலம் வேகமாக சென்றுவிடும் .
ஏன் படிக்னும் நினைக்கவேண்டாம். எப்படியும் படிக்கணும் நினையுங்க. அப்படி நினைச்சா படியுங்க
அப்போதான் புத்தகங்களின் அருமைப்பற்றி உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்.

மறுபடியும் பரமு ' முடிச்சிட்டியா'
'யாரை' நான்
சிரிக்கிறான் .

----உமா தமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி