10 லட்சம் மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
உலக சாதனை நிகழ்வாக 10 லட்சம் மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க தமிழக அரசால் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதுஇது தொடர்பாக பல நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது
அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறை மற்றும் 'கிரீன் லைப்' தொண்டு நிறுவனம் இணைந்து, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற இயக்கத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், குழந்தைகள் தினமான நேற்று உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள், 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் பிறகு முதல்-அமைச்சர், குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments