1980-களின் பிரபல நடிகர், நடிகைகள் சந்திப்பு தென்னிந்திய திரையுலகம் 1980கள் ஒரு பொற்காலமாக திகழ்ந்ததது அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அறிமுகமானவர்கள் முன்னணி கதாநாயகர்களாகவும் கதாநாயகியாகளாகவும் பிரபலமானார்கள். சினிமாவில் நீண்ட காலம் நீடித்து பல சாதானைகளை செய்தார்கள்ர். அப்போதைய நடிகர்களைத்தான் ஒவ்வொரு மொழியிலும் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். . 80-களின் திரையுல நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். சென்னையில்தான் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த ஆண்டுக்கான சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி வீட்டில் நடந்தது. இதில் நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா, சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர். ...