நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணம்


நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மிக பயணம் மேற்கொண்டு உள்ளார்.


 


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளிவரவுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.


 


   ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வழக்கத்தினை அவர் கடைப்பிடித்து வருகிறார்.  நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை கட்டியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது.  எனினும் தீவிர படப்பிடிப்பு பணிகளால் அதில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது jநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்


 


இதற்காக இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார் அவர் இமயமலையின் அடிவார பகுதியான உத்தரகாண்டின் டேராடூன் நகருக்கு செல்கிறார்.  பின்னர் அங்கிருந்து, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித ஸ்தலங்களுக்கு செல்கிறார்.  தொடர்ந்து பாபாஜி குகையில் தியானம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்.


 


இந்த பயணம் முடிந்தபின் தர்பார் பட டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என தெரிகிறது.  அதன்பின் சிறுத்தை சிவா இயக்கும் ரஜினிகாந்தின் 168வது படத்தில் நடிப்பார் என தெரியவருகிறது.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி