சிவாஜி ஆளுமை (பாகம் 4) நூல் வெளியீட்டு விழா
சிவாஜி ஆளுமை (பாகம் 4) நூல் வெளியீட்டு விழா
14.10.19 அன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கைத்தடி பதிப்பகம் சென்னைச்சிறகுகுள் சார்பில் மு-தா.செ. இன்பா எழுதிய கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை (பாகம் 4)என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.நடிகர் திரு சிவகுமார் நூலை வெளியிட்டார். விழாவிற்கு முனைவர் ராஜாராம் இ.ஆப(மேனாள் தமிழக அரசு செயலாளர்) தலைமை தாங்கினார்
முதற் படியை முருகுத்தமிழ்காவலர் திரு சி. ராஜேந்திரன்,இ.ஆ.ப., (மேனாள் தமிழக அரசு செயலாளர்) பெற்றுக் கொண்டார் அன்னாரின் சிறப்புரைமிக கச்சிதம் .விழாவில் நடிகர் சிவகுமார் அவர்களின் உரை அனைவரையும் கவர்ந்தது
இந்த விழாவில் தயாரிப்பாளரும் இயக்குனருமாகிய நடிகர் சித்ரா இலட்சுமணன் ,மக்கள் குரல் ராம்ஜி எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை , எத்திராஜ் மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் கவுசல்யா எழுத்தாளர் ஸ்வீட்லின் .எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Comments