விஜய் ரசிகர்கள் கைது
கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது
நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் நேற்று ரிலீசானது. நேற்று மாலை முதலே பிகில் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் குவிந்து ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியிலும் 3 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் காலை சிறப்பு காட்சிகள் நடத்தப்படவில்லை. எனவே விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து. சிறப்பு காட்சிகள் நடத்தக்கோரி போராட்டம் செய்தனர்.அப்போது தியேட்டர் முன்பு கோஷமிட்டு ரகளை செய்து. ரவுண்டானாவில் உள்ள போலீசாரின் தடுப்புகளையும் சிசிடிவி கேமிராக்களையும் உடைத்தனர். கற்களை வீசி வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.
விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு கூடிநின்ற விஜய் ரசிகர்கள் நாலாபுறமும் பயந்து சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான நிலை உருவானது. இந்த நிலையில், ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments