அஜித்தின் இளமை
‛மங்காத்தா தொடங்கி தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வந்தார் அஜித் குமார். அதிலும் நேர்கொண்ட பார்வையில் இதற்கு முன்பு நடித்ததை விடவும் முதிர்ச்சியான கெட்டப்பில் நடித்தார். அடுத்தபடியாக மீண்டும் வினோத் நடிக்கும் தனது 60வது படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புக்கு விடை கொடுத்துவிட்டு கறுப்பு தலை முடி, கிளீன் ஷேவ், மீசை என்று முற்றிலுமாக இளவட்டமாக மாறியுள்ளார் அஜித்.
நேற்று சென்னை விமான நிலையத்தில் இளமையான கெட்டப்பில் அஜித் வந்தார். அப்போது இளமையாக மட்டுமின்றி ஸ்டைலிசான தோற்றத்தில் அவரைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டு போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். அஜித்தின் இளமை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
Comments